என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 25, 2015

கடற்கரை மீதமர்ந்தோம்

கடற்கரை மீதமர்ந்தோம்
காற்று காதோடு பேசி செல்கிறது
மொழிதான் புரியவில்லை
கவனம் களவுபோனதே காரணமோ !
நண்டாக விரல்மாறி புரியாத கோலமிட,
மழலைகளின் மணல் விளையாட்டில்
தன் வாரிசின் முகம் கண்டிடுமோ !
எதிர்காலம் தெரிந்துக்கொள்ள
கைநீட்டும் இளவட்டங்கள் நடுவில்
இளமைகாலம் தொலைத்துவிட்ட
முதுமைகளும் கைநீட்டும் கொடுமை,
விரச விளையாடும் அரங்கேறும்
விரத்தியில் வசைபாடும் நடந்தேறும்,
மசாலாக்களின் நெடி இழுக்கும்
சுகாதாரத்தை முற்றிலும் சூறையாடும்,
கழுதையான குதிரைகளில்
தேசிங்குராஜாக்களின் எல்லைதாண்டா பாச்சல்,
சுட்டு வீழ்த்தும் பலூனில்
சூரனாகி நெஞ்சைநிமிர்த்தும் மாவீரர்கள்,
திரைமாயைகளின் மயக்கத்தில்
சேர்ந்தெடுக்கும் புகைப்பட புன்னகைகள்,
ஆர்பரிக்கும் அலைநடுவே கால்நனையா
கரைமுழுங்கும் தொடர்போராட்டம்,
தொடுவானம் தொட்டுவிடும்
மனபறவைகளின் தொடர்முயற்சி,
மீளா உறங்கிப்போன தலைவர்களை
காலமுழுக்க சுற்றிசெல்லும் மனிதகூட்டம்,
லயித்து போன மனரசனை
கண்ணை கட்டும் அவள் விரல்களில்
கலைந்துதான் போனதே,
என்னடா காதலா எவள் பார்வைப்பட்டது
என் வருகைக்குமுன் நையாண்டி செய்கிறாள்...
அசடுவழியும் அனிச்சை செயல் தானாகவே !...


- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment