
இரவின் மடியில் இன்பங்கள் தாலாட்ட ,
கனவுகள் இதமாய் கதைகள் சொல்லிட,
வலிகளை எல்லாம் கதவு தடுத்திட,
தாயின் மடி சுகம் மெத்தையுமாயிட ,
தென்றலை இதமாய் செயற்கை வழங்கிட,
தொலைத்த நினைவுகள் கண்முன்னே நிழலாடிட ,
இமைகள் பணிமுடிந்து கதவடைப்பு செய்திட,
எனை காக்க இதயம் இடைவிடாது உழைத்திட,
நாளை விடியும் என நம்பிக்கை பறைசாற்றிட,
உடல் மீது உயிர் காதல் மெய்யென வினவிட ,
உறக்கம் உடலை காமத்தில் மயக்கிட .......
இன்று மறைந்து போனது ..............
இரவு வணக்கங்களோடு ........
- பாலா .
நன்று... நல்ல பொழுதாகவே விடியட்டும்...
ReplyDeleteநன்றி நண்பா காலை வணக்கங்கள்
ReplyDelete