
இரத்தம் தோய்ந்த உன் உதடுகளின்
நித்தம் ஒரு கவிதை படிக்க ஆசை ,
உன் கண்சிமிட்டும் கரு விழியில் ,
எனை கண்டெடுக்க ஆசை ,
உன் விரல்களோடு நடனமாடும் கூந்தலிலே தென்றலாக குடியிருக்க ஆசை,
உந்தன் செவிகளில் ஊஞ்சலாடும்
தோடுகளாக நானிருக்க ஆசை ,
உன் முன்னழகின் மயக்கத்திலே
என் மதியிழக்காமல் காதலிக்கவே ஆசை ,
மலைகளின் வளை போன்ற இடையினிலே
குழந்தையாய் அமர்திருக்க ஆசை ,
உன் வருகையை பறை சற்றும் கொலுசோசை
இசைதனில் லையத்திருக்க ஆசை ,
உன் பூம்பாதம் தாங்கிகொள்ளும்
மலராக என்றும் நானிருக்க ஆசை ,
உன் தேகத்தின் அழகுதனை அருளிய
பிரமனுக்கு நன்றி சொல்லவே ஆசை ,
உனக்கு யார்மீது ஆசை நானறியேன் பெண்ணே !,
இருந்தாலும் ,அந்த யாரினில் நானிருபேனா !
அறிந்து கொள்ள உனை பின்தொடரவே ஆசை .